சார்பட்டா பரம்பரையின் "நாக் அவுட் கிங்" பாக்ஸர் ஆறுமுகம் காலமானார்..!! - Seithipunal
Seithipunal


வடசென்னையில் கடந்த 1980 காலக்கட்டத்தில் குத்துச்சண்டை போட்டிகளில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடிய நாக் அவுட் கிங் என பலராலும் போற்றப்பட்டவர் பாக்ஸர் ஆறுமுகம். சார்பட்டா பரம்பரை படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இவரிடம் நேரடியாக சார்பட்டா பரம்பரையின் கதையைக் கேட்ட ப ற்கு "சார்பட்டா பரம்பரை" படத்தை இயக்கினார்.

கடந்த 1985ம் ஆண்டு காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடிகாடாக இருந்துவர் பாக்ஸர் ஆறுமுகம். பிரபல குத்துச்சண்டை வீரரான இவர் வா குவாட்டர் கட்டிங், தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர் முச்சுத்திணறல் காரணமாக வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சார்பட்டா பரம்பரை பாக்ஸர் ஆறுமுகத்திற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்ற மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று திரை துறையினரும் அவருடைய ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். சார்பட்டா பரம்பரையின் நாக்கவுட் பாக்சர் ஆறுமுகம் காலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarpatta knockout king arumugam passes away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->