அ.தி.மு.க வில் நீக்கப்பட்ட சசிகலா: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
sasikala removal admk high court order
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்கான தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
பின்னர் அ.தி.மு.க பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டது.
இதற்கு பதிலாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என சசிகலா சென்னை உரிமை இயல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சசிகலாவை அ.தி.மு.கவில் இருந்து நீக்கியது செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கினர். மேலும் உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யவும் உத்தரவிடப்பட்டது.
English Summary
sasikala removal admk high court order