செல்போன் கடை இளைஞருடன் பள்ளி மாணவி உல்லாசம்!...கருக்கலைப்பிற்கு மருந்து சாப்பிட்ட மாணவி பலி!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் உள்ள பருத்திப்பள்ளியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர், தனது மனைவி, 2 மகன்கள், 17 வயதுடைய மக்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கட்டிட தொழிலாளியின் மகள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவி, புதுச்சத்திரம் நவனி பகுதியை சேர்ந்த செல்போன் கடையில் வேலை பார்க்கும் செந்தில் மகன் அரவிந்த் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருங்கிய பழக்க வழக்கத்தால், பள்ளி மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கருவை கலைக்க மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மாணவியை சிகிச்சைக்காக மல்லசமுத்திரத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,  காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl flirts with cell phone shop guy student dies after taking abortion pills what happened


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->