பாஜக கூட்டணியை மக்கள் விரட்டி அடிப்பார்கள் - செல்வப்பெருந்தகை காட்டம்.!!
selvaperunthagai speech about bjp
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
"அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
selvaperunthagai speech about bjp