அந்தியூர் வனப்பகுதியில் அதிர்ச்சி!...10 நாட்களுக்கு பிறகு யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு!
Shock in anthiyur forest elephant found dead after 10 days
அந்தியூரில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவை உயிரிழந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று, பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழங்கு குழி பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர்.
பின்னர் இது குறித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்தியூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர்.
அப்போது, கால்நடை மருத்துவர் யானையை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், உயிரிழந்த ஆண் யானைக்கு 25 வயது இருக்கலாம் என்றும், யானை உயிரிழந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், உணவுக்குழல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்து இருக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பிரேத பரிசோதனையில் யானையின் சுமார் 5 அடி நீளமுள்ள இரு தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு அந்தியூர் வனத்துறை அலுவலகத்திற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
English Summary
Shock in anthiyur forest elephant found dead after 10 days