"அது ஸ்ரீமதி இல்ல. நான் தான்".. வைரலான வீடீயோ குறித்து.. சிறுமி பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவர் பள்ளியில் பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது போலி வீடியோ என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது. 

இந்த நிலையில் ஸ்ரீமதி பேச்சாற்றல் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ உலா வருகிறது. இதுகுறித்து கோவையை சேர்ந்த பவதாரணி, "இந்த வீடியோ உண்மை இல்லை. இந்த வீடியோவில் இருப்பது நான்தான்" என்று தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srimathi speech Video fake complaints


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->