சுபமுகூர்த்த தினம்..பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்!
Subha Muhurtham Day.. More token at registration offices today!
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அந்தவகையில் இன்று முகூர்த்தநாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன என பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது. அப்போது ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும் என்று பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Subha Muhurtham Day.. More token at registration offices today!