வீடியோ! கடலில் குளிக்கும் போதே, வலிப்பு வந்து வீழ்ந்த சிறுவன்! அதிஷ்டவசமாக முதலுதவி செய்து காப்பற்றிய டிஜிபி!
Tamilnadu DGP rescue child in seashore at marina Beach
கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வேளையில், அங்கே கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் விழுந்தான்.
இதனை கவனித்த டிஜிபி சைலேந்திரபாபு, தண்ணீரில் மயங்கி விழுந்த சிறுவனை காப்பாற்றி கடற்கரைக்கு தூக்கி வந்து அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆப்பிளும் என்பதால், காவல்துறைக்கு சொந்தமான மணல் பரப்பில் ரோந்து செல்லும் வாகனத்தை வரவழைத்து, அதில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
மெரினா கடற்கரை சாலையில் தயாராக நின்று கொண்டிருந்த, ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட சிறுவன், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு பின் சிறுவன் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுவனை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சிறுவனின் தந்தை சதீஷ் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
English Summary
Tamilnadu DGP rescue child in seashore at marina Beach