ஐஏஎஸ் மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "தமிழக அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பயிற்சிகள் நடத்தப்படும். 

இங்கு அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 76 பேரில், 15 ஆண்கள், 3 பெண்கள் என்று மொத்தம் 18 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்தப் பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படவுள்ளது.  இந்தத்தேர்வு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்படும். இதில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.

அவ்வாறு இந்தத் தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். 

அப்படி இல்லையென்றால், 044 2462 1909 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இந்த மாதிரி ஆளுமைத் தேர்வுக்கான தேதி விரைவில் www.civilservice coaching.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government allounce model personality test


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->