திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பான வழக்கு.! சிபிசிஐடி அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம். இவரது ஒரே மகள் சரளா (வயது 17). இவர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை மாணவி சரளா வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து, விடுதியில் இருந்த சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி சரளா தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவி சரளா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு  டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thekkalur 12th class student suicide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->