தென்காசி தொகுதியில் இரட்டை இலையில் போட்டி - அதிரடி முடிவெடுத்த கிருஷ்ணசாமி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதில், அ.தி.மு.க.வை பொறுத்தவரை, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

தமிழகம், புதுவையில் 33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடும் நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. 

இது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இதற்காக என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தும் அது கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenkasi constituency in two leaf krishnasami contest info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->