இந்தம்மா பறையர்! அதுவும் தாழ்த்தப்பட்ட சமுகம்! எஸ்சி தானே! என மேடையில் ஒன்றிய குழு தலைவரை கேட்ட திமுக அமைச்சர்!
There has been an allegation of untouchability in the DMK regime
சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் தீண்டாமை தலை தூக்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!
திமுகவின் அமைச்சர்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் சாதிப் பாகுபாடு உடன் பேசுவதும் செயல்படுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சமூகநீதி பற்றி பேசும் திமுகவினர் அதை கடைபிடிக்க மறந்து விடுகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மணல்பூண்டி அடுத்த புதூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் பொன்முடி முகையூர் ஒன்றிய குழு தலைவரை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சி மேடையிலேயே அவரை தாழ்த்தப்பட்ட சமூகம் தானே என்று கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அமைச்சர் பொன்முடி ஒன்றிய குழு தலைவரை நோக்கி கைகாட்டி "இந்த அம்மா பறையர்..! அதுவும் தாழ்த்தப்பட்ட சமூதாயம்...! எஸ்சி தானே..!" என அனைவரின் முன்னிலையிலும் கேட்டுள்ளார்.
சமூகநீதி பற்றி பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் அதை தமது கட்சி உறுப்பினர்களுக்கு கற்றுத் தர வேண்டும். திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என மார்தட்டிக்கொள்ள தகுதி இல்லாதவர்கள் என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
திமுக அமைச்சரே சாதி வெறியை தோரணையாக குறிப்பிட்டு பெண்ணை அவமான மரியாதை செய்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There has been an allegation of untouchability in the DMK regime