திருப்பூர் | தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்! நோயாளிகள் அவதி!
Tirupur patients suffering vehicles parking
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் நிலைகுலைந்து நிறுத்தபட்டிருக்கும் வாகனங்களால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்:
திருப்பூர்: தாராபுரம் சாலையில் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தான் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் பலர் உள் நோயாளியாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் தங்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிலைகுலைந்த நிலையில் நிறுத்தி செல்வதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் அவசர சிகிச்சைக்காக வரும் 108 அவசர ஊர்தி மற்றும் இதர வாகனங்களும், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இதனை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Tirupur patients suffering vehicles parking