திருவிழாவில் பேனர் வைக்கும் போது நேர்ந்த விபரீதம்... 10 ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் இவரது மகன் மதன்ராஜ் (வயது 15) இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கூத்தாநல்லூர் பகுதியில் மாரியம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளதால் மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன், சஞ்சய், சித்தார்த்தன் ஆகியோர் கோவில் அருகே பேனர் வைத்தனர். 

அப்போது பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் நான்கு பேர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நான்கு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் போலீசார் மதன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvarur school student killed electric shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->