சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. காரணம் இதுதான்..!!
Traffic changes in Chennai for 4 days
இந்தியா முழுவதும் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக தமிழக அரசின் சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் முன்பாக நடைபெறும்.
ஆனால் தற்பொழுது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உழைப்பாளர் சிலை அருகே நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒத்திகை கடற்கரை சாலையில் வரும் ஜனவரி 20, 22, 24 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினாவில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்ய சென்னை மாநகர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறையைச் சார்ந்த காவலர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோன்று பல்வேறு துறைகளை சார்ந்த அலங்கார உறுதியை அணிவகுப்பம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Traffic changes in Chennai for 4 days