விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் - டிடிவி தினகரன்.!
TTV Dhinakaran Tweet about Actor Vivek Better Health Status 16 April 2021
நடிகர் விவேக் வீட்டில் இருக்கையில் தீடீரென மயங்கி விழுந்த நிலையில், சென்னையில் உள்ள வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து சிம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் " நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. சுயநினைவு இல்லாமல் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். எக்மோ கருவி உதவியுடன் வீவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விவேக்கின் உடல்நிலைக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை. 24 மணிநேரம் கழித்த பின்னரே அவரது உடல்நிலை குறித்த முன்னேற்றம் தெரியும். மாரடைப்பு மற்றும் இதய நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது " என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
TTV Dhinakaran Tweet about Actor Vivek Better Health Status 16 April 2021