மாநாட்டுக்கு வந்த தொண்டர்களில் 6 பேர் பலி - வேதனையுடன் இரங்கல் தெரிவித்த விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வந்த தொண்டர்களில் 6 பேர் விபத்து மற்றும் வெயில் தாக்கத்தால் பலியாகினர்.

உயிரிழந்த 6 பேருக்கும் இரங்கல் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விட்டுள்ள இரங்கல் செய்தியில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் JK.விஜய்கலை, சென்னை பாரிமுனை, கழகத் தோழர் வசந்தகுமார் மற்றும் ரியாஸ், செஞ்சி கழகத் தோழர் உதயகுமார், மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வில்லிவாக்கம், கழகத் தோழர் சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். 

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Vijay Condolence 6 TVK Members death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->