மோசடி!!! கம்பி எண்ணும் இருவர்!!!அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 62 லட்சம் ஏமாற்றம்....!!! - Seithipunal
Seithipunal


சென்னைமாநகரம் புளியந்தோப்பை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் உட்பட 14 பேர் அரசு வேலை பெறுவதற்காக பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.கமலக்கண்ணன் , 14 பேரின் பணத்தை மீட்டு தருமாறு ,சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் எழுதியிருந்ததாவது, "இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, மயிலாப்பூரைச் சேர்ந்த 34 வயதான டில்லி குமார், கொளத்துாரைச் சேர்ந்த 34 வயதான மகேஷ் இருவரும் பல லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

எனவே, இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்"எனத் தெரிவித்திருந்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் டில்லிகுமார் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும், 14 பேரிடம் இருந்து ரூ. 62.8 லட்சம் பணத்தை பெற்று, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் இதில்  உதவி கமிஷனர் சுரேந்திரன், ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people arrested fake Government job promised to buy Rs 62 lakhs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->