உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம்! அவதிப்படும் வாகன ஓட்டிகள்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதமான காரணத்தினால் வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் மற்றும் உணவுக்காக அவதிப்படும் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.

வனப்பகுதியில் உள்ள அனைத்து அணையிலும் நீர் இருப்பு குறைந்து புல்வெளிகளாக இருப்பதால் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள யானைகள் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அணைக்குள் காணப்படுகின்றன. 

உடுமலை - அமராவதி வனச்சரகங்களுக்கு நடுவில் உள்ள உடுமலை - மூணாறு போக்குவரத்து சாலைகளில் யானைகளின் நடமாட்டம் காலை, மாலை நேரங்களில் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்படைகிறது.

இதனால் வனத்துறை சோதனை சாவடியில், வாகன ஓட்டுனர்களை கவனமாக செல்ல எச்சரித்துள்ளனர். மேலும் சாலையோரங்களில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். 

இந்த பகுதியில், ஆண்டு தோறும் யானைகள் வருகை அதிகமாக உள்ளதால் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்க மூணாறு சாலைகளிலும் பாதுக்காப்பு பணியை அதிகரித்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udumalai munaru road side elephants walking


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->