உன்னங்குளம் பத்திரகாளி பராசக்தி கோவில் பங்குனி திருவிழா..கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உள்ள உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவிலில் வருடாந்திர திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியுள்ளது.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில்.கேட்டவர்களுக்கு கேட்டவரம் அளிக்கும் பத்திரகாளி பராசக்தி அம்மனுக்கு பங்குனி மாதம் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத திருவிழா நேற்று திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் நம்பூதிரிகள் திருகொடிஏற்றினர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.அதனை தொடர்ந்து  பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டன.   

தொடர்ந்து 10 நாட்கள்  திருவிழா நடைபெறஉள்ளது.திருவிழா நாட்களில் அம்மனுக்கு தினமும் காலை, மதியம் ,இரவு  என மூன்று நேரங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அதேபோல் திருவிழா நாட்களில் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து எட்டாம் திருவிழா திங்கள்கிழமை அன்று மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், நாதஸ்வரகச்சேரி,வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.இரவு அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது .

ஒன்பதாம் திருநாள் செவாய்க்கிழமை அன்று சிறுவர்களுக்கான அலகு குத்துதல், சிறுமியர்களுக்கான மாவிளக்கு ஏந்துதல் போன்ற நிகழ்ச்சி நடைபெறும்.அப்போது நோன்பு இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். அதன் பின்னர் மகா சிறப்பு தீபாதனையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.பத்தாம் திருவிழாவான புதன்கிழமை பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

திருவிழா நாட்களில் மாணவ ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ,கரகாட்டம் ,ஒயிலாட்டம்,மயில்குதிரைஆட்டம்மற்றும்நகைச்சுவைபட்டிமன்றம்போன்றபல்வேறுநிகழ்ச்சிகளும்நடைபெறவுள்ளன.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unnakulam Batrakali Parasakthi Temple Panguni Festival Flag hoisting begins


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->