எலிபசையில் பல் துலக்கிய இளம்பெண் - நொடி பொழுதில் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி. கொத்தனாரான இவரது மனைவி ரேவதி கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசை என்று நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை வைத்து பல் துலக்கியுள்ளார். இதையடுத்து வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்துள்ளார்.

இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்க கலக்கத்தில் பற்பசை என்று நினைத்து எலி பசையில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman death due to eat rat paste in trichy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->