தென்காசி : மகனைத் திருத்த தற்கொலை நாடகம் ஆடிய தாய் - விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி : மகனைத் திருத்த தற்கொலை நாடகம் ஆடிய தாய் - விபரீதத்தில் முடிந்த சம்பவம்.!!

தென்காசி மாவட்டமத்தில் உள்ள செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியையான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து  கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில், ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதையறிந்த, அவர் தனது மகனை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும், பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார்.

இதனால் ஆசிரியை கிருஷ்ணவேணி தன் மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டி மகன் கண் எதிரிலேயே தூக்கு போட்டுள்ளார். ஆனால் இதை அவரது மகன் கண்டுக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார். 

ஆனால், தூக்கு மாட்டிய கிருஷ்ணவேணி அதில் இருந்து விடுபட முயன்றபோது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide in tenkasi for


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->