புரட்சிகர கண்டுபிடிப்பு... 'உலகை திருப்பிய நார்மன் ஜோசப் உட்லேண்ட்..!
Revolutionary discovery Norman Joseph Woodland turned the world around
'உலகை திருப்பிய அந்த கோடுகள்' பார்கோட்டை கண்டுபிடித்த திரு.நார்மன் ஜோசப் உட்லேண்ட் அவர்கள் நினைவு தினம்!.
உங்களால் பார் கோடுகள் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் கண்காணிக்க பார்கோடுகள் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. சில்லறை விற்பனை, சரக்கு மேலாண்மை என பல்பொருள் அங்காடி தொடங்கி ஆன்லைனில் ஆர்டர் வரை பார்கோடுகள் இன்றி எந்த பொருளயும் நம்மால் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது.
இந்த புரட்சிகர கண்டுபிடிப்பின் பின்னால் உள்ள புத்திசாலித்தனமான மனிதரான நார்மன் ஜோசப் உட்லேண்ட் வாழ்கையை பார்ப்போம் .
நார்மன் ஜோசப் உட்லேண்ட்,(செப்டம்பர் 6, 1921- டிசம்பர் 9, 2012) நியூ ஜெர்சியின் அட்லாண்டிக் சிட்டியில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆர்வத்தையும் திறமையையும்வெளிப்படுத்தினார்.
உட்லேண்ட் மறைந்த நிலையில் அவரது மரணத்திற்கு பிறகு அன்றைய ஜனாதிபதி பராக் ஒபாமாவால் தேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் நவீன சமுதாயத்தில் அவரது கண்டுபிடிப்பின் ஆழமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
பார்கோடு நார்மன் ஜோசப் உட்லேண்ட் மற்றும் பெர்னார்ட் சில்வர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 1952 இல் அமெரிக்காவில் காப்புரிமை பெற்றது. இந்த கண்டுபிடிப்பு மோர்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.
புரட்சிகர கண்டுபிடிப்பின் பின்னால் 'உலகை திருப்பிய அந்த கோடுகள்' பார்கோட்டை கண்டுபிடித்த திரு.நார்மன் ஜோசப் உட்லேண்ட் அவர்கள் நினைவு தினம் டிசம்பர் 9.அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
English Summary
Revolutionary discovery Norman Joseph Woodland turned the world around