ரிக்டரில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கம்...!!! சாலையில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் மக்கள்!!!
Earthquake measuring 5point8 Richter scale Afghan people sheltered road
இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

மேலும் இன்று மதியம் 12.17 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.இந்த திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இந்த அதிர்வினால், பெரும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
அதில் முக்கியமாக காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இது சற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Earthquake measuring 5point8 Richter scale Afghan people sheltered road