அமெரிக்காவில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உருவான புயல் காரணமாக அப்பலாச்சியா மற்றும் கென்டக்கி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் தொடரும் மின்தடையால் 31000க்கும் மேற்பட்டோர் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் கென்டக்கி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ள நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பலியானார் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று மாகாண ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளின் மூலமாக மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வெள்ள நீர் மட்டம் தொடந்து உயர்ந்து கொண்டே வருவதால் மீட்பு பணிகள் தடைப்பட்டு வருகிறது.

மேலும் கிழக்கு கென்டக்கி, தென்மேற்கு வர்ஜீனியா மற்றும் மேற்கு வர்ஜீனியா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாகாணத்தை சுற்றியுள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eight people were killed in the floods in America


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->