குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. பிலிப்பைன்சில் 8 பேர் உடல் கருகி பலியான சோகம்!
Fire breaks out in residential building 8 dead in Philippines
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் சான் இசிட்ரோ கலாஸ் கிராமத்தில் இன்று அதிகாலை 3 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் சான் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ளகுடியிருப்பு கட்டிடத்தில்இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது,இந்த பயங்கர தீ விபத்தில் முதல் தளத்தில் வசித்து வந்த 2 பேரும், 2-வது தளத்தில் வசித்து வந்த 6 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். உடனடியாக தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருவது தொடர் கதையாக இருக்கிறது.கோடைக்காலம் தொடங்குவை முன்னிட்டு மார்ச் மாதம் அரசு தீ விபத்தை தடுப்பது குறித்து வழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.மேலும் மார்ச் மாதம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிலிப்பைன்ஸ் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாதது, அதிக மக்கள் கூட்டம், ஒழுங்கற்ற கட்டட வடிவமைப்பு ஆகியவை அடிக்கடி தீ விபத்து ஏற்பட காரணம் எனக் தகவல் கூறப்படுகிறது.
முன்னதாக குயிசனில் கடந்த 1996-ம் ஆண்டு இரவு விடுதியில் நடைபெற்ற தீ விபத்தில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தின் போது பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்ததையொட்டி ஏராளமான மாணவர்கள் விடுதிக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்து பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மிகவும் கொடூரமான தீ விபத்தாக கூறப்படுகிறது.
English Summary
Fire breaks out in residential building 8 dead in Philippines