புனைவியல் இயக்கத்தின் முக்கியமானவர்களுள் ஒருவரான நபர் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


ஜார்ஜ் கோர்டன் பைரன் :

புனைவியல் இயக்கத்தின் முக்கியமானவர்களுள் ஒருவரான ஜார்ஜ் கோர்டன் பைரன் 1788ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி லண்டன், ஹோலஸ் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார்.

இவர் Chile Harolds Pilgrimage என்னும் தனது சுயசரிதைக் கவிதையை வெளியிட்டார். வெளிவந்த உடனே இது மகத்தான வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து கவிதைகளை வெளியிட்டார்.

இவரின் தி புரோபசி ஆஃப் டான்டெ, டான் ஜுவன் மற்றும் கவிதை நாடகங்களான ஃபெலியரோ, சர்டான்பாலஸ், தி டு ஃபோஸ்காரி ஆகிய பல படைப்புகள் 1821ஆம் ஆண்டு வெளிவந்தன.

இவர் துருக்கிக்கு எதிராக கிரேக்க விடுதலைப் போரில் உதவி செய்தார். அதனால் கிரேக்கர்கள் இவரை ஒரு தேசிய வீரனாக கொண்டாடினர்.

ஆங்கில-ஸ்காட்டிய புனைவியல் இயக்கக் கவிஞர்களில் முக்கியமானவராகப் போற்றப்பட்ட இவர் உடல்நிலை பாதிப்பால் 1824ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் மிசோலோங்கியில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

George Gordon Byron birthday 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->