ஜப்பானுக்கு கடும் எச்சரிக்கை! 3 லட்சம் உயிர்கள் பலியாகலாம்! அடுத்த பேரழிவு?! அதிரவைக்கும் செய்தி!
Japan Earth Quake alert
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், ஜப்பான் மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பசிபிக் கடற்கரையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பேரழிவை உருவாக்கும் சுனாமிகளை தூண்டக்கூடும். ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழும் அபாயமும் இருக்கிறது.
தற்போதைய ஆய்வுகளின்படி, நங்காய் ட்ரஃப் பகுதியில் 8 முதல் 9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகக்கூடிய நிலநடுக்கம் வரும் வாய்ப்பு 80% என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 12 லட்சம் பேர் இடம்பெயர்த்தாலும், அதிலிருந்து 2.98 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியாகக் கருதப்படும் 270.3 டிரில்லியன் யென் பொருளாதார சேதம் ஏற்படும் என்று புதிய மதிப்பீடு தெரிவிக்கிறது. இது முந்தைய 214.2 டிரில்லியன் யெனைக் காட்டிலும் மிக அதிகம்.
2011-ல் ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அணுஉலை வெடிவிபத்து ஏற்பட்ட போது, 15,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று, எதிர்வரும் பேரழிவில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.