மனிதர்களை தாக்கும் புதிய வைரஸ் பரவல்...ரஷ்யாவில் கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில், ரஷ்யாவில் கொரோனா போன்ற 'கோஸ்டா - 2' என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வௌவ்வால்களிடம் இருந்து இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ், 'சார்ஸ் கோவிட் 2' என்ற கொரோனாவின் துணை வகையை சேர்ந்தது. இது மனித செல்களையும் தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதால், இது ஒரு புதிய அச்சுறுத்தலாக அமையலாம்.

கொரோனா தடுப்பூசியில் இருந்து கிடைக்கும் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனுடையது இந்த வைரஸ். இதில், கொரோனா வைரசிடம் இருப்பதை போன்று மனித செல்களை தாக்கும் 'ஏ.சி.இ.,-2' புரோட்டின் உள்ளது.

இந்த வைரஸ் முதன்முறையாக 2020ல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது மனிதர்களை பாதிக்கும் வகையில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடவில்லை.

அதன் பிறகு  மேலும் ஆய்வு செய்தததில், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் புரவும் என்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் வவ்வால், பங்கோலியன், ரக்கூன் நாய், ஆசிய மர நாய் போன்ற விலங்குகளிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new virus costa-2


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->