பசி கொடுமை! கிறிஸ்துமஸ் விழா உணவுக்காக உயிரை விட்ட 67 பேர்!
Nigeria Christmas accident
நைஜீரியாவில் கடுமையான பஞ்சத்தால் மக்கள், குறிப்பாக குழந்தைகள், பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நாடெங்கிலும் உணவு வழங்கும் நிகழ்வுகள் நடந்தன. ஆனால், நிகழ்வுகளின் போது ஏற்பட்ட நெரிசலில் 67 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓயோ மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 35 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த 21 ஆம் தேதி தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேரும், தலைநகர் அபுஜாவில் 10 பேரும்உயிரிழந்தனர்.
அபுஜாவில் தேவாலயத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உடைகள் மற்றும் உணவைப் பெற கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் உயிர் சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
நைஜீரிய அரசு இச்சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நாட்டு குடியரசு தலைவர் போலா டினுபு அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.
தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி, நாட்டில் நிலவும் வறுமை, உயர்ந்த உணவு விலைகள், மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே இந்த துயரங்களுக்கு காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Nigeria Christmas accident