வரலாறு படைக்க உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மெமோரியல் கொலிசியம் !! - Seithipunal
Seithipunal


பிரம்மாண்ட உலக தடகளம், லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழு 2028 இல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இப்போது ஒலிம்பிக்கின் தடகள விளையாட்டுகள் பிரமாண்டமான லாஸ் ஏஞ்சல்ஸ் மெமோரியல் கொலிசியத்தில் நடைபெற உள்ளது. மூன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் மைதானமாக இந்த மெமோரியல் கொலிசிய வரலாறு படைக்க உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த மாற்றம் தடகளத்தில் புதுமை மற்றும் நமது விளையாட்டு வீரர்களின் உலகளாவிய சுயவிவரத்தை உயர்த்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. முதல் வாரத்தில் தடகளத்திற்கு முன்னுரிமை கொடுப்பது உற்சாகமான தொடக்கத்தை ஏற்படுத்தும். இது உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் என உலக தடகள தலைவர் செபாஸ்டியன் தெரிவித்தார்.

உலக தடகளம் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 இல் நீச்சல் போட்டிகள் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். மாரத்தான் போட்டிகள் இறுதி வார இறுதியில் நடைபெறும். உலக தடகள நிறைவு விழாவில் வெற்றி பெற்றோருக்கு  பதக்கங்கள் வழங்கப்படும். கடந்த 1896ஆம் ஆண்டில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்த பாரம்பரியம் தற்போது வரை தொடர்கிறது.

ஜிம்னாஸ்டிக்ஸ் கிரிப்டோ அரங்கில் இந்த உலக தடகளம் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 நடைபெற உள்ளது . இந்த அரங்கு இதற்க்கு முன்பு ஸ்டேபிள்ஸ் மையம் என்று அழைக்கப்பட்டது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ், ஸ்பார்க்ஸ் மற்றும் கிங்ஸின் சொந்த நகரம். சோஃபி ஸ்டேடியத்தில் நீச்சல் போட்டிகள் நடைபெறும். இது NFL இன் ராம்ஸ் மற்றும் சார்ஜர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. மேலும் கூடைப்பந்து போட்டி இன்ட்யூட் டோமில் நடைபெறும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற 2028 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்த உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் போட்டியிட உள்ளது. நடக்கவிருக்கும் 35 விளையாட்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிடுவார்கள். 1932 மற்றும் 1984 விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக்கை நடத்துவது இது மூன்றாவது முறையாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Olympic colosseum in los Angeles going to create a history


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->