காணொலி மூலம் இன்று ரஷ்யா-சீனா அதிபர்கள் பேச்சுவார்த்தை.!
Russia and China president will hold video conference today
சீனாவுடன் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று தொடங்க உள்ள பேச்சு வார்த்தையின் போது ரஷ்ய-சீன இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகப் பரிமாற்றத்தின் வளர்ச்சி மற்றும் முக்கியமான மாகாண பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்திருந்தபோது சீனா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் பொழுது இரு நாடுகளுக்கிடையே வர்த்தகரீதியாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Russia and China president will hold video conference today