புதையலுடன் மூழ்கிய கப்பல்..உரிமை கோரும் நான்கு நாடுகள்! - Seithipunal
Seithipunal


இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே கரீபியன் கடல் பகுதியில் கடும் போர் நடந்தது. அப்போது ஸ்பெயினுக்குச் சொந்தமான சான் ஜோஸ் கேலியன் என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அந்த இடம் கார்டேஜினாவின் பாரு தீவு என்று கூறப்படுகிறது.

மேலும் அந்தக் கப்பலில் பலகோடி ருபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட புதையல்கள் இருந்ததாகவும், ஸ்பெயினுக்கு செல்லும் வழியில் தான் அது கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு அந்தக் கப்பல் குறித்த விவாதங்கள் எழுந்த நிலையில் சில வரலாற்று ஆய்வாளர்கள், கொலம்பியா கடற்கரையின் கரீபியன் கடலில் அந்தக் கப்பல் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கொலம்பியா அரசு அதை தேடும் முயற்சியில் இறங்கியது.

இதையடுத்து 2015ம் ஆண்டு கப்பலின் சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பியா அரசு அறிவித்தது. இந்நிலையில் சீ - சர்ச் - ஆர்மடாஸை சேர்ந்த சிலர் தாங்கள் தான் இந்த கப்பலை முதலில் கண்டுபிடித்து கொலம்பியா அரசிடம் தெரிவித்தோம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இந்நிலையில் தற்போது ஸ்பெயின், கொலம்பியா, பொலிவியா மற்றும் அமெரிக்க டைவர்ஸ் ஆகியோர் இந்த கப்பலுக்கு உரிமை கோருகின்றனர். ஸ்பெயின் இது தங்களது கப்பல் என்றும், கொலம்பியா தங்கள் கடற்கரை என்றும், பொலிவியா தங்களது எல்லையில் தான் கப்பல் மூழ்கியுள்ளது என்றும், சி - சர்ச் - ஆர்மடாஸ் தாங்கள் தான் முதலில் கண்டுபிடித்தோம் என்றும் உரிமை கோரி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunken ship with treasure Four countries claiming the right


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->