டெக்ஸாஸில் சைபர்ட்ரக் உற்பத்தியை தொடங்கிய டெஸ்லா நிறுவனம்.!! - Seithipunal
Seithipunal


உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் எலன் மாஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் மூலம் சைபர்ட்ரக்கை உருவாக்குவதில் குறிக்கோளாக இருந்து வருகிறார். அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 6,500 திரவ எரிபொருளில் இயங்கும் டிரக்குகளுக்கு மாற்றாக மின்சாரத்தில் முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் சைபர்ட்ரக்கை டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த ட்ரக்கில் பின் சக்கரத்தில் மட்டும் இயங்கும் (RWD) மாடலின் அடிப்படை விலை $39,900 எனவும், நான்கு சக்கரங்களிலும் இயங்கும் (AWD) மாடல்கள் விலை $49,900 முதல் தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சைபர்ட்ரக்கின் உற்பத்தி 2021ல் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பலமுறை உற்பத்தி தேதிகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் எலன் மாஸ்க் 2023ம் ஆண்டு இறுதிக்குள் சைபர்ட்ரக் உற்பத்தி தொடங்கப்பட்டு டெலிவரி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் சைபர்ட்க்கின் உற்பத்தியை டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள கிகா தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்தின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் "முதல் சைபர்ட்ரக் கட்டுமானம் டெக்சாஸில் உள்ள கிகா தொழிற்சாலையில் நிறைவடைந்துள்ளது"என்பதை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது. அதனை ரீட்விட் செய்த எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tesla built irst cybertruck at giga texas


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->