ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் குறித்து அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் அறிவிப்பு.!!
Ukraine ready to hold talks with Russia on ceasefire
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மக்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதி மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் எதிர்ப்பு கூட்டணி குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசனை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine ready to hold talks with Russia on ceasefire