உக்ரைன் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பு - ஐ.நா. கண்டனம்
UN chief condemns annexation of provinces to russia
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக தீவிரமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய மாகாணங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.
இந்த நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 4 மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார். இந்நிலையில் உக்ரைன் மாகணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகள் அந்த மாகாணங்களில் அமைதியை பாதிக்கும் எனவும், ஐநா பொதுச் செயலாளர் என்ற முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை நிலைநிறுத்த, இதை நான் குறிப்பிட்டு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு நாட்டின் மாகாணங்களை பலப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது அச்சுறுத்துவது மூலமாகவோ மற்றொரு நாட்டுடன் இணைப்பது ஐ.நா.வின் கொள்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை மீறும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
English Summary
UN chief condemns annexation of provinces to russia