உங்களால் போரில் வெற்றி பெற முடியாது..உக்ரைன் அதிபரை நேரில் எச்சரித்த டிரம்ப்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில்  அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இதையடுத்து இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.

மேலும் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷியாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என்று தெரிவித்தார். இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அழைத்தார். அப்போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் அதிகரிக்கவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குறுக்கிட்டார்.

அப்போது டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பார்த்து, "நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்" என்று கோபத்துடன் தெரிவித்தார்.

மேலும் "உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை என்றும்  நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது என்றும்  நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது என்றும் நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள் என கோபமாக பேசினார்.

மேலும் போரில் நீங்கள் வெல்லவில்லை என்றும்  350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது என்றும் உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும்" என்று அவர் கூறினார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You cant win a war. Trump warns Ukrainian president


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->