அமெரிக்காவிடம் அடிபணிந்த உக்ரைன்; கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என்கிறார் ஜெலன்ஸ்கி..!
Zelensky says it is ready to sign a mineral agreement
ரஷியா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது, இது தொடர்பாக இரு தரப்பிடமும் அமெரிக்கா பேசி வருகிறது. இந்நிலையில், ஜெலன்ஸ்கி உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதன்படி வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலின் போது, டிரம்ப்பின் கருத்தை மறுத்து ஜெலன்ஸ்கி எதிர்வாதம் செய்தார். இதன்காரணமாக அவரை உடனடியாக பிளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நெருக்கடியில் இருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவி குறித்து ஜெலன்ஸ்கியிடம் கூறிய டிரம்ப், இதற்காக தங்கள் நாட்டுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டிருந்தார்.

அத்துடன், உக்ரைனுக்கு இதுவரை செய்த செலவுகளுக்கு ஈடாக, அந்நாட்டில் உள்ள கனிமவளங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், அமெரிக்காவுடனான கனிமவள ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைன் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'ரஷியாவுடனான நீண்டகால போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவதற்காக டிரம்ப் தலைமையின் கீழ் பேச்சுவார்த்தைக்கு வர தயார் எனவும், அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசியதாவது:- ''உக்ரைன் அதிபரிடம் இருந்து இன்று முக்கியமான கடிதம் வந்தது. நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்காக விரைவில் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தயாராக உள்ளது என அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். நீடித்த அமைதியை பெற ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமையின் கீழ் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பராமரிக்க அமெரிக்கா செய்த உதவிகளுக்கு மதிப்பு அளிப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.'' என்று பேசியிருந்தார்.
அத்துடன், கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பொறுத்தவரை, உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் அதில் கையெழுத்திட உக்ரைன் தயாராக உள்ளது என ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார் என்றும், இந்த கடிதத்தை அனுப்பியதற்காக அவரை பாராட்டுகிறேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்ப் நாடாளுமன்றத்தில் உரையாறுகையில், ''ரஷியாவுடனும் தீவிரமான விவாதங்களை நடத்தியுள்ளோம். அவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர்.'' என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Zelensky says it is ready to sign a mineral agreement