ரஷிய படையெடுப்பை ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது - டிரம்ப் சொல்கிறார்!
Zelensky should not have resisted Russian invasion Trump
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரை பேச்சுவார்த்தை மூலம் ஈடுபட்டு ஜெலன்ஸ்கி போரை தவிர்த்து இருக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் கூறியுள்ளார்.
நேட்டோவில் இணைவது என்ற உக்ரைனின் முடிவுக்கு எதிராக ரஷிய உக்ரைன் மீது படையெடுத்தது. இதற்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தநிலையில் இரு நாடுகள் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.இதையடுத்து கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை ரஷியா முதலில் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இதன் பின்னர் அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. இந்தநிலையில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3-ம் ஆண்டு நிறைவை நோக்கி செல்கிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு தெர்வித்துவருவதுடன் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.இந்தநிலையில் ரஷியாவுக்கு வடகொரியாவும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், அளித்த பேட்டியில், ஜெலன்ஸ்கி மிக பெரிய, அதிக சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராக போரிட்டு வருகிறார் என்றும் ரஷியாவின் ராணுவ பலத்திற்கு எதிராக போரிடுவது என்பது வீணானது எனவும் அதனை அவர் செய்திருக்க கூடாது என்றும் போரை தவிர்க்க, ரஷிய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்றும் அதனை நான் எளிதில் செய்து இருப்பேன் என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய டிரம்ப், இரு நாடுகளின் மோதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்றும் எனினும், ரஷியா விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும் என்றும் பொருளாதார தடைகளையும் விதிக்கும் என டிரம்ப் கூறியுள்ளார்.
English Summary
Zelensky should not have resisted Russian invasion Trump